Close
ஏப்ரல் 24, 2025 7:27 மணி

வரி குறைப்புக்கு லஞ்சம்..! மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது..!

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.

தொழில்வரி குறைப்பு குறித்து லஞ்சம் கேட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கும்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக தற்போது தொழில் வரி வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் வீட்டு உரிமையாளர் மற்றும் தொழில் சார்ந்த நபர்களிடம் வசூலித்து வருகின்றனர். மேலும் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் செலுத்தும் அனைத்து வரிகளுக்கும் 5% தள்ளுபடி உண்டு எனவும் மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிலிட்டரி சாலையில் பயிற்சி தொழிற்சாலை நடத்தி வரும் சரவணன் என்பவரிடம் தொழில் வரி சம்பந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ் தொழில்வரி செலுத்த கூறியுள்ளார்.

மேலும் அவரின் தொழில்வரி குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ள நிலையில் சரவணன் தொழில் வரியாக ரூபாய் 300 ஜிபே மூலம் பிரகாஷ்க்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மேலும் தனக்கு ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து தொலைபேசியில் வற்புறுத்தி உள்ளார்.

இதனைத் தர மறுத்த சரவணன் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக டிஎஸ்பி கலைச்செல்வனிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று லஞ்சம் ஒழிப்புத்துறையின் ஆலோசனையின் பேரில் ரூபாய் ஐந்தாயிரத்தை சரவணன் பிரகாஷிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கீதா , தமிழரசி உள்ளிட்ட அலுவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 5000 ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top