Close
ஏப்ரல் 27, 2025 12:06 காலை

சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா..!

சோழவந்தான் பிரளயநாதர் ஆலயம்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள விசாக நட்சத்திர திருக்கோவிலான ‌அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.

நந்தி பகவானுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நிற்க தேவாரப் பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்கள் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று மனமுருக வேண்டி தங்கள் வழிபாட்டினை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார். ஏற்பாடுகளை, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில், பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன்,

கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, கணக்கர் சி. பூபதி செய்திருந்தனர். இதே போல ,திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவிலிலும் கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் கோவிலிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top