Close
ஏப்ரல் 26, 2025 10:32 மணி

2026 ல் அரசியலில் களம் இறங்கும் ரஜினிகாந்த்..! சித்தர்கள் ஏட்டில் குறிப்பு -விவசாய விஞ்ஞானி தகவல்..!

சி.ராஜேந்திரன் (69) விவசாய விஞ்ஞானி

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சி.ராஜேந்திரன் (69) விவசாய விஞ்ஞானி. இவர் வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலராக பணி செய்தார்.

அப்போது குறுகிய கால சாகுபடி நெல் ரகமான சின்ன பொன்னி என்ற நெல் ரகத்தை கண்டுபிடித்து 1996 ஆண்டு ஜனாதிபதியிடம் விருது பெற்றார். பின் 2000 ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின் எக்காலமும் அழியா முக்காலத்தை உணர்ந்த ஞானிகளான சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அதை சேகரித்து படித்து ஆய்வு பணியை மேற்கொண்டார்.

அதில் எதிர்காலத்தில் உலகில் நடக்கும் பல்வேறு அதிசயங்கள் எழுதப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். குறிப்பாக தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர் நாடாழ்வார் என்று எம்ஜிஆரை பற்றி குறிப்பு இருந்ததாகவும் அதன்படி அவர் ஆட்சி செய்தார் என்றும் அதன் பின் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகள் நடத்துவது பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

அவை யெல்லாம் நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரியும். இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ரஜினிகாந்த் பற்றி குறிப்பு இருப்பது தான். ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்த அப்போது வாய் திறந்தவர் .

ஜெயலலிதா முதல்வரானால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாத்த முடியாது என்று சொன்ன ஒரு வார்த்தையால் மக்கள் மாற்றத்தை உருவாக்கினார்கள். அதன்பின் சனிப்பெயர்ச்சி ஏற்பட்டதால் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறி ஒதுங்கி இருந்தார்.

அவரது சிம்ம லக்னம் மகர ராசி திருவோண நட்சத்திரத்தின் பிறந்த அவரது ஜாதக பலாபலன்படி 2025ல் களத்திர ஸ்தானத்திலிருந்து சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்துக்கு செல்வதால் இனி அவருக்கு ராஜயோகம் வரப் போகிறது அதனால் 2026ல் அரசியலில் களம் இறங்கி முதல்வராக வருவார் என்று சித்தரி ன் ஓலைச்சுவடியில் குறிப்பு உள்ளது.

உலக நீதி காவலர் என்ற தலைப்பில் பாடப்பட்ட பாடலில் “உரைக்க மேல் வளர்ந்து வரும் பெருந்தலைவன் , கண்டிடவே மராட்டிய குல தலைவன், காட்டலாம் சிவாஜி ராவ் என்ற நாமம், உண்டப்பா ஆன்மீகச் செல்வனவன், உரைக்க வரும் அரசியலிலும் ஈடுபாடு, கண்டிடவே வருகை யதுவும் நிச்சயம் தான், நலம் மெத்த மேல் அன்னவனும் காரியவாதி , மேலவே உண்டெனிலும் நல்லோன்கான் , பற்றவரும் காந்தனவன் பெரு ஞானி, ஞானி ஒத்து படபடப்பு குணம் உள்ளேன்,நவிலக்கேன் ஆத்ம ஞானம் தான் உள்ளோன் , தேனீ போல் சுறுசுறுப்பு குணம் உண்டு, தென்னம் போல் மனமும் உண்டு.

இருதலைவர் இறப்பு மீண்டு, மகாமக ஆண்டு கழிந்து, பல குழப்பம் இருதலைக்கொள்ளி எறும்பு, ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைக்கும் நிலை தெளிவுடனே செயலாற்றம் மக்கள் முன் முகம் தோன்றி நல் வழியும் செய்யும் விதி!!. மற்ற கலிக்கூத்து நடிகர்களும் நிகழ்வு நிலை உண்டு. நீர்க்குமிழி போல் ஆவர். அன்று மலர்ந்த மலர் போலும் பூத்து மலர்ந்து செழித்து மேவ வீடா வாடியதன் மலர் போல அந்நிலைக்கு உள்ளாவர்.

பெண்டவளுக்கு தீர்வு விதி பெண்ணாலே தான் அழிவாள். சாற்றக்கேள் அது மின்னும் நடிகன் ஒருவன் ஆக்கமுடன் அரசியலுக்கு வருவான் காண்”இது சத்தியவாக்கு சந்திரன் சூரியன் செல்லும் திசை மாறினாலும் சித்தன் வாக்கு அணுவளவும் பொய்யாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

உலகத்தில் மனிதனுக்கு ஏற்படும் 4448 நோய்களுக்கு தீர்வை ஏற்படுத்தும் இயற்கையான முறையில் மருந்துகளை கண்டுபிடித்து ஸ்தூல உடல் அழிந்தாலும், சூட்சும உடல் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்களின் வாக்குபடி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top