விழுப்புரம்:
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சற்று இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிழல் தரும் பசுமை நிழல் பந்தலை (பசுமை வலை) விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு சனிக்கிழமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனை அடுத்து பொது மக்களுக்கு நீர்மோர் தர்பூசணி,பழங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் ரவீந்திரநாத் குப்தா,போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் குமரராஜா,விஜயரங்கன், விழுப்புரம் திமுக. நகர செயலாளர் சக்கரை,இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகள் டாக்டர் கோவிந்தராஜ்,டாக்டர் திருமாவளவன்,சரோஜினி டிரஸ்ட் அருள்ராஜ், அமரஜி, புல்லட் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.