மதுரை.
மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனத்திற்கு மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 172 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 806.051 கிலோ கஞ்சா இன்று காலை கொண்டுவரப்பட்டது. மதுரை மாநகர கமிஷனர் லோகநாதன் தலைமையில் அந்த கஞ்சா பொட்டலங்கள் எரித்து அழிக்கப்பட்டது.
இதில், மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அனிதா, மாநகர உதவி கமிஷனர் சக்திவேல், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்ன குமார் மற்றும் தடய அறிவியல் துறையைச் சேர்ந்த வித்தியா தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை நிறுவனமான அசெப்டிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில், உரிய பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த கஞ்சா எரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.