ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக ஒரு கால நிர்ணயம் செய்து அதை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் அயலக தமிழக நலன் அணியின் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுக்குழு கூட்டம் வருகின்ற மே 15 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அதில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கும்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் நாடு சந்திக்கும் காஷ்மீர் தாக்குதல் பாகிஸ்தான் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் ஆலோசிக்க உள்ளோம்.
மே 25ஆம் தேதி டெல்லியில் தேசிய தலைமை நிலையம் காயிதே மில்லத் சென்டர் திறப்பு விழா நடக்கிறது .
இதில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா காந்தி ராகுல் காந்தி திமுக வெளியிட்ட மதசார்பற்ற கட்சிகளின் தேசிய தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
காஷ்மீர் படுகொலை குறித்து இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை எடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று தீர்மானித்து இருக்கிறோம்.
அந்த தீவிரவாத தாக்குதலை எந்த மதத்தினரோடும் ஒப்பிட்டு பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்பதை நாங்கள் தெளிவாக சொல்லி வருகிறோம்.
டிசம்பர் 28ஆம் தேதி முஸ்லிம் லீக்கின் முகலால் ஜமாத்தின் மாநில மாநாடு கும்பகோணத்தில் நடக்க இருக்கிறது அதில் தமிழக முதல்வர் துணை முதல்வர் பங்கேற்க உள்ளனர்.
அதில் சட்டமன்றத் தேர்தலிலே முஸ்லிம் சமுதாயங்களை வாக்குகளை ஒன்றிணைக்கும் திட்டங்கள் குறித்து அறிவிக்க இருக்கிறோம். அதேபோல் முஸ்லிம் லீக் போட்டியிடக் கூடிய தொகுதிகளை அடையாளப்படுத்த இருக்கிறோம்.
பாஜகவை எதிர்த்து அமைப்பு அனைத்து கட்சிகளும் ஒன்றில் அனைத்து கணத்திலும் ஒன்றிணைக்கும் வகையில் எங்களது நடவடிக்கை இருக்கும்.
தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியிலும் மாநில அளவில் திமுக கூட்டணியும் தொடர்ந்து இருந்து வருகிறோம். பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரியக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம் .