Close
மே 7, 2025 10:21 மணி

குடியிருப்புக்கு பட்டா கேட்டு புதிரை வண்ணார் ஆட்சியரிடம் கோரிக்கை..!

வீடு கேட்டு மனு கொடுக்க வந்திருக்கும் புதிரை வண்ணார் மக்கள்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம்,கன்னலம் கிராம புதிரை வண்ணார் சமூக மக்கள் குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்டது கன்னலம் கிராமம், இக்கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட புதிரை வண்ணார் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தலைமுறை, தலைமுறைகளாக அங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாங்கள் குடியிருக்கும் குடியிருப்பு இடத்திற்கு பட்டா கேட்டு வழக்கறிஞர் பிரசாந்த் தலைமையில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, அங்கு நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அரசின் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top