Close
மே 6, 2025 9:24 மணி

ஒரு கிராம மக்கள் இன்னொரு கிராமத்துக்குச் சென்று சாமி ஆடி அருள் வாக்கு கூறும் திருவிழா..!

அருள் கூறும் சாமியாடிகள்

அலங்காநல்லூர்:

ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு:

மதுரை மாவட்டம் , சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான வைகை ஆற்றல் கள்ளழகர் இறங்கும் நிகழ்வாகும்.இந்த திருவிழாவை முன்னிட்டு ,மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் பெருசு பட்டி பங்காளிகள் முத்து கருப்புசாமி வணங்கும் கிராமத்தினர் திரிப்பந்தம் எடுத்து சாமி ஆடி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள அழகாபுரி என்னும் கிராமத்திற்கு சென்று அழகாயி சாமிக்கு பாத்தியப்பட்ட கவுண்டர் 48 பங்காளிகள் குடும்பத்தினரும் அழகர்சாமி. கன்னியப்பன்.ஜெகநாதன் பாரதிதாசன், இளையராஜா / புகழேந்தி. பிரேம்குமார். ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இணைந்து பழமை மாறாமல் இங்கு வந்து சாமி அடி அருள் வாக்கு கூறுவது வழக்கம்.
மேள தாளங்கள் முழங்க கோவில் முன்பு வலசை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சாமியாடி அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், முக்கிய நிகழ்வாக பல ஆண்டுகளுக்கு முன்பு அழகாபுரி கிராமத்தில் ஒரே வீடு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஒருவர் உங்கள் குழந்தைகள் இல்லையா என கேட்டு அவர்களுக்கு அருள்வாக்கு கூறி அவர்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

அந்த நிகழ்வை சுட்டிக் காட்டும் வகையில் இந்த சித்திரை மாதம் வலசை கிராமப் பகுதி மக்கள் இங்கு அழகாபுரி 48 பங்காளி குடும்பத்தினரும் இணைந்து இந்த வினோதமான திருவிழாவில்
சாமியாடி குழந்தை இல்லாதவர்களுக்கு அருள் வாக்கு . குழந்தை வரம் மற்றும் பல்வேறு வரங்களை பொதுமக்களுக்கு சாமி அடிகள் அருள்வாக்காக வழங்குவார்கள்.

இதில் ,அதிசிய நிகழ்வாக சாமியாடிகள் ஆண்டுதோறும் வந்து அருள்வாக்கும் கூறும் திருவிழா அன்று இந்த அழகாபுரியை சேர்ந்த 48 பங்காளிகளின் ஒருவர் குடும்பத்தில் உள்ள பசு மாடு கன்று பிறந்து ,அதன் (முதல் பால்). சீம்பால் கொண்டு வந்து இந்த சாமியாடிகளுக்கு வழங்குவது தொன்று தொட்டு நடைபெறுவது வழக்கமாக உள்ளது .

அதுபோன்று, இந்த வருடமும் பசு மாடு கன்று ஈன்று அதனுடைய பசுவின் (முதல் பால்)சீம்பாலை சாமி ஆடிகளுக்கு வழங்கினார்கள். இந்த வினோத திருவிழா ஆண்டு தோறும் இந்த பகுதியில் நடைபெறுகிறது. இதில், ஏராளமான ஊர் கலந்து கொண்டு அருள்வாக்கு பெற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top