கோடை விடுமுறை காலத்தில் இலவச விளையாட்டு பயிற்சிகள் அளித்து இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உத்திரமேரூர் பகுதி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைகளினை மாணவ மாணவிகள் இருந்து வருகின்றனர்.
இந்த முப்பது நாள் விடுமுறை நாட்களை தங்களது விருப்பமான விளையாட்டுகள் மற்றும் பிற தனித் திறமைகள் வெளி கொணரும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்தவித சிறப்பு பயிற்சிகளுக்கும் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற இயலாத நிலையை உணர்ந்த உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தனது சொந்த ஊரான உத்திரமேரூர் பகுதியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமினை துவக்கி உள்ளனர்.
இதில் வாலிபால் சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான சிறப்பு பயிற்சிகளை காலை மற்றும் மாலை வேலைகளில் ஐந்து வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதில் 120க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த செயல் இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளும் கோடை விடுமுறையில் செல்போன் உள்ளிட்டவைகளை தவிர்க்கும் வகையில் இந்த பயிற்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனை உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொள்வது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது