Close
மே 9, 2025 4:40 காலை

போதையின் பாதையில் செல்லாதீர் என அறிவுரை..! முதலமைச்சருக்கு கேள்வி?

டாஸ்மாக் கடையை மூட போராட்டம்

போதையின் பாதையில் செல்லாதீர் எனக் கூறிவிட்டு, போகும் பாதையில் டாஸ்மாக் அமைப்பது நியாயமா ? என முதல்வரை பெண் வறுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அப்துல்லாபுரம் ஊராட்சி நவசக்தி நகர் குடியிருப்பு பகுதியில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது இடமாற்றம் செய்யப்பட்ட பகுதியினை சுற்றி குடியிருப்புகளும் பள்ளிகளும் உள்ளது என்பதும் தற்போது விரிவாக பகுதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் மூடக்கோரி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெண்கள் குழந்தைகள் என பலர் கடைக்கு முன்பாக கோஷங்கள் எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசி ராஜலட்சுமி கூறுகையில் , இந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட மதுபான கடைகளால் இப்பகுதிக்கு அதிக அளவில் நபர்கள் வருவதும் மதுபானங்களை சாலையில் அமர்ந்து அருந்துவதுமாக இருக்கின்றனர்.

அவசர தேவைக்கு எங்கள் செல்ல இயலாத அச்ச நிலையை உள்ளது. தமிழக முதல்வர் தற்போது போதையின் பாதையில் செல்லாதீர்கள் என அறிவுறுத்தும் வரும் நிலையில், போகும் பாதையில் டாஸ்மார்க் மதுபான கடையை அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவும் திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் கிடைக்கும் என நினைத்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு இல்லாத விடியலே தற்போது உள்ளது.

தனிப்பட்ட திமுக நபருக்காக இந்த கடையை இடம் மாற்றம் செய்ததும் இது குறித்து கேள்வி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதும் என செயலே இந்த ஆட்சியின் அவலத்தை விளக்குகிறது என தெரிவித்தார்.

இதை அகற்றாவிட்டால் அரசு நல திட்ட உதவிகள் எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் அதையும் மீறி முதல்வரின் தனிப்பிரிவு என பல பிரிவுகளில் புகார் தெரிவித்தால் அந்த புகார் மனு இந்த நபருக்கு கிடைக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

பேட்டி : ராஜலட்சுமி – குடியிருப்புவாசி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top