புதுக்கோட்டைசெந்தூரான் பொறியியல் கல்லூரியில் சாய் சரவணா செஸ் அகாடமி சார்பில் ஐந்தாவது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை சாய் சரவணா செஸ் அகாடமி நடத்தும் ஐந்தாவது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 372 சதுரங்க வீரர்களும் வீராங்கனைகளும் இளம்சதுரங்க வீரர்களும் ஆர்வத்துடன் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர்.
இப் போட்டியின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக தலைவர் தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

செந்தூரன் கல்லூரி முதன்மை செயல்அலுவலர் கார்த்திக் முன்னிலை வகித்தார் மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் அடைக்கலவன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
செந்தூரான் பொறியியல்கல்லூரி முதல்வர் கணேஷ் பாபு, சர்வதேச சதுரங்க நடுவர்கள் அங்கப்பன் மற்றும் ஆனந்த பாபு, தினகரன், கண்ணன் மற்றும் எஸ். என். ஏ. சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர்கள் கணேசன் ஜெயக்குமார் செயற்குழு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சாய் சரவணா செஸ் அகாடமி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் செந்தூரான் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் செய்தனர்.