Close
மே 11, 2025 8:40 மணி

ஏழை எளியவருக்கு நல உதவிகள் வழங்கும் விழா..!

நல உதவிகள் வழங்கப்பட்டன

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில பொருளாளர் கே என் நாகராஜன் பிறந்த நாள் விழாவையொட்டி, ஏழை எளியோரக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, மாவட்டச் செயலாளர் செந்தில் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் எம். கே. கணேசன், முனியாண்டி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மணிகண்டன்,மாவட்டப்பொருளார் செல்வம்,ஒன்றிய விவசாய செயலாளர் வையாபுரி ஒன்றியத் தலைவர் சுழியன் என்ற கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞரணி செயலாளர் கே.என்.கணேசன் வரவேற்றார். இந்த விழாவில்,100 பெண்களுக்கு சேலைகளும், மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மாநில பொருளாளர் கே. என். நாகராஜன் வழங்கினார்.

கம்பன் கழகத் தலைவர் புலவர் அழகர்சாமி,முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமு தேவர், புறநகர் மாவட்ட செயலாளர் காளி, தென் மண்டலத் தலைவர் குஷி செந்தில்,தென் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், நிர்வாகிகள் முருகேசன் சுரேஷ் அன்பு சின்ராஜ்
சாமிநாதன், பசும்பொன் மூர்த்தி கண்ணன், மணிவண்ணன் உள்படலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், கண்ணன் சிலம்பம் பள்ளி மாணவ மாணவியரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. முடிவில், இளைஞரணி நிர்வாகி சந்தோஷ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top