Close
மே 11, 2025 12:53 காலை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தேரோட்டத்துக்கு தேர் சுத்தம் செய்யும் பணி..!

வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வரும் 11ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20ம் தேதி புதன்கிழமை வரை நடைபெற உள்ளது.

தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை அதிவேக அழுத்தத்துடன் திருத்தேர் மீது பீய்ச்சி அடித்து கழுவி சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை,மாலை, என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

பிரம்மோற்சவத்தில் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் வரும் 13ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 17-ம் தேதியும் நடைபெறுகிறது.

தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை அதிவேக அழுத்தத்துடன் திருத்தேர் மீது பீய்ச்சி அடித்து கழுவி சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்.

வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 73 அடி உயரம் உள்ள திருத்தேரினை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக திருத்தேரில் படிந்துள்ள தும்பு, தூசிகளை அகற்றிடும் வகையில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை அதிவேக அழுத்தத்துடன் தேர் மீது பீய்ச்சி அடித்து திருத்தேரினை கழுவி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top