Close
மே 12, 2025 7:58 மணி

வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார்..!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிந்தா கோஷமிட்டு வரவேற்றனர்

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோரும் சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக ஜெனக நாராயண பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் தரிசனம் முடித்து காலை சரியாக ஒன்பது முப்பது மணி அளவில் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்.

அப்போது கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டும் வானவேடிக்கை மற்றும் அதிர் வேட்டுகள் முழங்க பக்தர்களின் கோவிந்தா கோசத்துடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கியதால் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோழவந்தானில் குவிந்தனர். தொடர்ந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இன்று மாலை வரை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top