மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த அழுத்த நோய்களுக்கு காரணமான கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்புகளை சிறப்பாக குறைக்கும் ஒலியிக்ஆசிட் அதிக அளவில் உள்ள அதிசய நிலக்கடலை ரகம் கிர்னார்5 ரகம் ஆகும்.
விவசாயிகள் இப்பொது புதிய நிலக்கடலை ரகத்தை பயிரிட்டு அதிக லாபமும் பெறலாம். விவேகமான உணவு உற்பத்தியிலும் பங்கு பெறலாம். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் கீழக்குறிச்சி, கன்னியாகுறிச்சி, ஒலயகுன்னம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கதிரிக்கு அடுத்து முக்கியத்துவத்தை கொடுத்து கிர்னார்5 ரகத்தை பயிரிட்டு வருகின்றனர்
விதைகள் விவசாயிகள் தன்னார்வமாக வட மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலமாக தருவித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நிலக்கடலையில் மேட்டுப்பாத்தி முறையில் பயன்படுத்தி சாகுபடி செய்து வருவதால் தரமான கோடை காலத்தில் விவசாயிகளுக்கு வளமான எதிர்காலத்தை நல்ல விளைச்சலின் மூலம் கிர்னார்5 உறுதி செய்கிறது.
மதுக்கூர் வட்டாரத்தில் கீழக்குறிச்சி கிராமத்தில் ரஜினி என்ற முன்னோடி விவசாயி மற்றும் கன்னியாகுறிச்சியில் முத்துக்குமார் என்ற விவசாயி மேற்கண்ட ரகத்தினை சாகுபடி செய்து ஒரு செடிக்கு 60 முதல் 80 கடலை இருக்குமாறு சாகுபடி செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் விதைகளை பெற்று சாகுபடி செய்துள்ள ரஜினி கீழ குறிச்சி அவர்கள் இந்த ரகத்தை குறித்த தகவல்களை அனைத்து விவசாயிகளிடமும் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளையும் மேற்கண்ட இரு விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவிலேயே அதிக ஒலிம்பிக் அமிலம் 74 ஃ% வரை கொண்ட ரகம் இது. மேலும் 67 சதவீதம் வரை எண்ணெய் பிழியும் திறன் கொண்டது. அதிக அளவு என்னை தருவதுடன் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்புகளை விரைந்து கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட நிலக்கடலை விதைகளை விவசாயிகள் தங்கள் வயலில் தங்களுக்கு என தற்சார்பாய் பயன்படுத்துவதற்கு என சாகுபடி செய்து பயன்படுத்திட மதுக்கூர் வட்டார விவசாயிகளை வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக் கொண்டார்.
பூச்சி மற்றும் நோய்களுக்கு நல்ல எதிர்ப்புத் திறன் உடையதாகவும் 110 நாட்கள் என்ற குறுகிய கால ரகமாகவும் குத்து செடியாகவும் வளரக்கூடியது. அதிக மகசூல் தரவல்லது. எனவே பயிரிட்டு பயன் பெற வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார்.