வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு, வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குனர் தாமரைச்செல்வி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மொக்கமாயன், காமேஸ்வரன், பாசன ஆய்வாளர் முகமது சுல்தான், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,கிராம ஊராட்சி கிருஷ்ணவேணி, வள்ளி, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜேந்திர குமார்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துராமன்,தீயணைப்பு நிலைய அதிகாரி பால நாகராஜ்
உள்பட பல்துறையை சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ,விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகள் சம்மந்தமாக பேசினர். வாடிப்பட்டி பகுதியில் உள்ள கட்டக்குளம், தனிச்சியம், தாதம்பட்டி அய்யனார் கோவில் உள்ளிட்ட பல கண்மாய்களில் தண்ணீர் இல்லாத போது கோடை காலங்களில் சீமை கருவேலை மரங்களை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
கொண்டையம்பட்டி பெருமாள்பட்டி பிரிவு வரை புதுக்குளம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் அருகே உள்ள மண்வெளி பாதையால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
அதற்கு, கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் , உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.