Close
மே 17, 2025 8:45 மணி

ஆபரேஷன் சிந்தூர் மூலம் எதிரிகளை குலைநடுங்கச் செய்தார் மோடி : மாவட்டத்தலைவர் பேச்சு..!

மாவட்டத்தலைவர் ஆனந்தன் பேசினார்.

பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்துதென்காசி மேலப்புலியூர் வரை தேசியக் கொடியுடன் பேரணியாக சென்று ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி வெற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவ வலிமையை உலக நாடுகள் அறிந்து உள்ளது. துருக்கி மற்றும் சீனா டிரோன்கள் நமது வானிலையை தொடும் முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. நமது தாக்குதலில் இன்றுவரை பாகிஸ்தானின் வான்பரப்பு திறக்கப்படவில்லை. ஆப்ரேஷன் சிந்தூர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதும் இந்தியாவின் சில விமான நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டிருந்தது.

திமுக இரட்டை வேடம் போடுகிறது. வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா பொருளாதாரத்திலும் வல்லரசாகும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், பால ஸ்ரீனிவாசன்
மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ்,
மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்கு மார் அணி பிரிவு கிளை கமிட்டி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நன்றியுரை தென்காசி நகர தலைவர் சங்கர சுப்ரமணியன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top