Close
மே 20, 2025 5:39 மணி

எழுத்தாளர் நா.முத்துநிலவன் நூல்கள் வெளியீடு

புதுக்கோட்டை

எழுத்தாளர் நா.முத்துநிலவன் நூல்களை வெளியிட்ட அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை:  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவனின் படைப்புலகம் ஆய்வரங்கம் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், வீதி கலை இலக்கியக் களம், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளின் நடைபெற்ற விழாவிற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார்.

‘இலக்கியம் இனிது’ என்ற நூலை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட, மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  அகநி பதிப்பகம் கவிஞர் மு.முருகேஷ் கௌரவிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை

‘நேர்காணல்கள்’ நூலை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னதுரை, புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் நா.முத்துநிலவன் ஏற்புரை வழங்கினார்.

வாழ்வரங்கத்தில் தமுஎகச மாநிலத் தலைவர் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் கு.ம.திருப்பதி, ஜீவி, ஆர்.நீலா, மருத்துவர் நா.ஜெயராமன், அண்டனூர் சுரா ஆகியோர் பேசினர். படைப்புலகம் பற்றி புலவர் செந்தலை ந.கவுதமன் மற்றும் ராசி பன்னீர்செல்வன், ஸ்டாலின் சரவணன், மகா சுந்தர், இரா.ஜெயலட்சுமி ஆகியோரும் பேசினர்.

முன்னதாக வீதி கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.கீதா வரவேற்றார். முடிவில் எஸ்.கஸ்தூரி ரெங்கன் நன்றி கூறினார். கவிஞர்கள் ரேவதி, மைதிலி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top