Close
நவம்பர் 22, 2024 6:08 காலை

புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ  கணினி பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச கணினி பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5 -ஆம் வீதியில் உள்ள எஸ்  எஸ் ஐ  கணினி பயிற்சிநிறுவனம்

புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ  கணினி பயிற்சி நிறுவனம் சார்பில்  பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு  இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5 -ஆம் வீதியில் உள்ள எஸ்  எஸ் ஐ  கணினி பயிற்சிநிறுவனம் சார்பில்  பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு  இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுவதாக  எஸ்  எஸ் ஐ  கணினி பயிற்சிநிறுவனம்   ஹரிஷ்மாலை அறக்கட்டளை சார்பில்  நிறுவனர் மற்றும் தலைவர் சந்திரசேகர்   தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம்   பாதிக்கப்பட் டுள்ள  சூழ்நிலையில்,  புதுக்கோட்டையில் இயங்கிவரும் ஹரிஷ்மாலை அறக்கட்டளை சார்பில்   அனைத்து ஊராட்சிகளை சார்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் அனைவருக்கும்  வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு  அடிப்படையான  கணினி பயிற்சி, எம்.எஸ்.ஆபீஸ், போட்டோஷாப், டி.டி.பி ( MS OFFICE ,  PHOTOS HOP, DTP) மற்றும்  பெண்களுக்கு சுயதொழில் புரிய   தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள   அனைத்து ஊராட்சிகளை சார்ந்த அரசு வேலைவாய்ப்பற் றோர்களுக்கு  வேலைவாய்ப்பு தகவல் மையம் மூலம் மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள்  பற்றிய அறிவிப்புகள்,   பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி    வேலைவாய்ப்பு அணுகுவதற்கான காலி பணியிடங்கள்  பற்றிய தகவல் மற்றும், இலவச அடிப்படைக் கணினி பயிற்சி, தையல் பயிற்சி 07.02.2022 முதல் 31.03.2022 வரை பயிற்சி வழங்கப் படும்.

பயிற்சிபெற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள  அனைவரும் சாந்தநாதபுரம் 5 -ஆம் வீதியில் உள்ள எஸ்  எஸ் ஐ  கணினி பயிற்சி  நிறுவனம்,    ஹரிஷ்மாலை கல்வி அறக்கட்டளை தொலைபேசி எண்ணில  89460 00204, 04322 -231377. தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொண்டு  நேரில் வந்து. பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என ஹரிஷ்மாலை அறக்கட்டளை சார்பில்  நிறுவனர் மற்றும் தலைவர் சந்திரசேகர்   தெரிவித்துள்ளார்.

அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் இலவச  பயிற்சி அளிக்கப்படும் என அவர்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top