பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த எம். ட்டுப்பாளை யம் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல் பட்டு வருகிறது. இங்கு தினமும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பால் கறந்து அதற்கான பணத்தை பெற்றுச் சென்று வருகின்ற னர். இந்தப் பால் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த செல்வ மணி என்ற மூதாட்டி கடந்த 7 வருடமாக இந்த பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பால் வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு வந்து தான் கொண்டு வந்த பாலை கொடுக்க வந்தார்.
அப்போது அங்குள்ள அதிகாரிகள் உங்கள் பால் தரமாக இல்லை என்பதால் பால் வாங்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி செல்வமணி பால் கொடுக்கா மல் இங்க இருக்க சொல்ல மாட்டேன் என்று கூறி அலுவலகத்தின் தரையில் திடீரென படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொட ர்ந்து மூதாட்டி அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.