புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாளுக் குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது கிடைத்த முத்துக்கண்ணம்மாளின் சொந்த ஊர் விராலிமலைதான்.தாத்தா, அப்பா, அம்மா, சித்தின்னு குடும்பமே சதிராட்டக் குடும்பம். அப்பா ராமச்சந்திரன் நட்டுவனார்கிட்ட இருந்துதான் முறைப்படி சதிராட்டத்தைக் கற்றுக்கொண்டார். அவர்தான் குருவும்கூட. விராலிமலையைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் இந்த குடும்பம்தான் சதிர் ஆடும். தனக்கு 7வயசு இருக்கும்போதே சதிர் ஆட வந்துவிச்சார். ஏழு வயசு இருக்கும்போதே விராலிமலை முருகனுக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்டவர். அந்த நேரத்துல இவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் கோயிலுக்கு சேவை செய்திருக்கின்றனர். 32 பேருக்கும் சதிர் சொல்லிக்கொடுத்தது முத்துக்கண்ணம்மாளின் அப்பாதான்.
தினமும் காலை, மாலை இருவேளையும் 400 படிகள் ஏறி,இறங்கி சுப்பிரமணியசுவாமியை வணங்கிப் பாடல் பாடி, சதிர் நடனம் ஆடுவதுதான் பணி. கோயில் திருவிழாக்களில் சதிர் ஆடுவார்கள்.
விராலிமலைக் கோயிலை நிர்வகித்து வந்த புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபால தொண்டைமான்தான் இவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும், சலுகைகளையும் செய்து கொடுத்தார். ஊரே இவர்களைக் கொண்டாடியது.
மன்னர் ஆட்சியும் முடிவுக்கு வந்தவுடன். கோயிலில் சதிர் ஆடுவது நின்று போனது. பிழைப்புக்காக, மன்னர்கள் கொடுத்த நிலங்கள்தான் இவர்களது வாழ்கைக்கு உயிர் கொடுத்தது.
இவரது பாட்டிக்குக் கொடுத்த 18 ஏக்கர்ல இப்போ ஒரு ஏக்கர் நிலம்கூட முழுசா இல்லை. என்னோட சேர்ந்து ஆடுனவங்கள்ல 32 பேர்ல இவர் மட்டும்தான் உயிருடன் உள்ளார். கணவர் தண்டபாணி. இப்ப அவர் உயிரோட இல்லை.
ரெண்டு பையன், ஒரு பொண்ணு. மகள் வீட்டுலதான் வாழ்ந்துகிட்டிருக்கேன். அரசின் உதவித்தொகையா ரூ.3000 கிடைக்குது. இப்ப ஒண்ணு, ரெண்டு பேர் இந்தக் கலை பத்தித் தெரிஞ்சிக்கிட்டு என்னை வந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு சதிர் கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார் தனக்கு அறிவிச்சிருக்கிற இந்த விருது மூலமா கண்டிப்பா தன்னோட இந்தக் கலை அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் விராலிமலை சதிர் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்.
இதனிடையே, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட முத்துக்கண்ணம்மாள் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு,க.ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.