Close
நவம்பர் 23, 2024 11:50 மணி

எல்கேஜி-யுகேஜி வகுப்பு ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

சிகரம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளித்த கல்வியாளர் சங்கமம் நிறுவனர் சதிஷ்குமார்

எல்கேஜி-யுகேஜி  வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் பணியிறக்கம் செய்யப்பட்டதைப் போல இடைநிலை ஆசிரியர்களை தமிழகம் முழுவதும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பணிமாற்றம் செய்து நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டன. அடுத்து வரும் கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற உறுதி அடிப்படையில் அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அடுத்து நடைபெற்ற கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை ஏதும் வழங்கப்படவில்லை.

தற்போது வெளியிடப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்விலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந் தது.  இதனைப் பள்ளிக் கல்வி அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதியளித்த  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, தான் கூறிய உறுதியை நிறைவேற்றும் வகையில்  எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்து, இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3,000 இடைநிலை ஆசிரியர்கள் இந்த நிர்வாக மாறுதலால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய கோரிக்கை இன்று பள்ளிக்கல்வி அமைச்சர் மூலமாக நிறைவேறி இருக்கின்றது.

மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் களின் சார்பாகவும், கல்வியாளர்கள் சங்கமம் சார்பாகவும் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அமைச்சரை சந்தித்த பொழுது ஐந்து முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசி இருந்தோம். விரைவாக அவற்றில் இதுவரை நான்கு கோரிக்கைகள் நிறைவேறிவிட்டன. மீதம் உள்ள கோரிக்கையும்  விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top