Close
நவம்பர் 22, 2024 6:36 காலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மண்டல அலுவலர்களுடன் தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு

தேர்தல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் தொடர்பாக, மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  முன்னிலையில் மண்டல அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (07.02.2022) கலந்தாய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளா ட்சி சாதாரணத் தேர்தல் 19.02.2022 அன்று நடை பெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி களில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி தேர்தல் நடைபெறும் புதுக்கோட்டை நகராட்சி 9 மண்டலங்களாகவும், அறந்தாங்கி நகராட்சி 3 மண்டலங்களாகவும் மற்றும் 8 பேரூரா ட்சிகள் தலா ஒரு மண்டலம் என மொத்தம் 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வை யாளர் மோனிகா ராணா தெரிவித்ததாவது;

ஒவ்வொரு மண்டல அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிக ளான குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.

மேலும், தேர்தல் நாளன்று சுமுகமான முறையில் தேர்தலினை நடத்திட ஏதுவாக வாக்குச்சாவடி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை உடனுக்குடன் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்களை கொண்டு செல்வதற்கும், பதிவான வாக்குகள் அடங்கிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பான முறை யில் கொண்டு செல்வதற்கான வழித்தடங் களின் பாதுகாப்பையும் உறுதி செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 45 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறி யப்பட்டுள்ளது. எனவே மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பதற்ற மான வாக்குச்சாவடி மையங்கள் இருந்தால், அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் 30 பறக்கும்படை குழுக்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெறும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எனவே அனைத்து அலுவலர்களும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்தும் முறையாக தெரிந்துகொண்டு, தேர்தலை சுமுகமான முறையில் நடத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, சிறப்பு வருவாய் அலுவலர் ஆர்.ரம்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top