புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் தேர்தல் பணிக்குழு தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின் 27 -ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்பு என்கிற கனகசபை வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு பிப்.19 -இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டி யிடுகின்றனர்.களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிடும் திமுக அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வருகின்றனர்.
அதில், நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபையின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை, தமிழ் மாநில காங்கிரஸ் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஆர்.எல். தமிழரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் லேணா. சரவணன், புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ். ஏ. எஸ் சேட்டு என்கிற அப்துல் ரஹ்மான், வட்டச்செயலாளர் அப்துல்லா, அன்னபூர்ணா சங்கர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பணிக்குழு அலுவலகத் திறப்பு விழாவுக்கு வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபை சால்வை அணிவித்து கௌரவித்தார்.