Close
நவம்பர் 21, 2024 11:55 மணி

புதுகை நகராட்சி 16 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெரிய பள்ளி வாசலில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் எஸ்.அப்துல்ரஹ்மான்(எ)சேட்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  16 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ்.அப்துல்ரஹ்மான்  என்ற எஸ்.ஏ.எஸ். சேட்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை நகராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  16 -ஆவது வார்டில் எஸ்.அப்துல்ரஹ்மான்  என்ற எஸ்.ஏ.எஸ். சேட்    போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 2001-06 மற்றும் 2011-16  ஆகிய ஆண்டுகளில்  நகர்மன்ற உறுப்பினராகவும் நகர்மன்ற துணைத்தலைவராகவும் பதவி வகித்து வார்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தற்போது மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் களம் காணும் எஸ்.அப்துல்ரஹ்மான்  என்ற எஸ்.ஏ.எஸ். சேட்  தனது வார்டுக்குள்பட்ட   தெற்கு 2, 3, 4 வீதிகள்,  பழைய அரண்மனை, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, சீதாபதிபிள்ளை யார்கோவில் வீதி, சத்திரம் சந்து, பல்லவன்குளம் வடக்கு சந்து, பல்லவன்குளம் வடிமதகு சந்து, சாந்தநாதசுவாமி கோவில் சந்து, முனிசிபல் ஆபிஸ் சந்து,ஜெயில்மோரி சந்து, ரொட்டிக்கார சந்து, பல்லவன்குளம் வடக்கு சந்து மேல்கரை ஆகிய பகுதிகளில்  வீடு வீடாகச்சென்று  வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 1,372, பெண் வாக்காளர்கள் 1,533 உள்பட மொத்தம் 2,905 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தெற்கு 2 -ஆம் வீதியிலுள்ள பெரிய பள்ளி வாசலில் மதியம் 1 மணியளவில் தொழுகை முடிந்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம்  இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தான் வெற்றி பெற்றவுடன் தனது வார்டு பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சித்திட்டங்கள் குறித்து வேட்பாளர்  எஸ்.அப்துல்ரஹ்மான்  என்ற எஸ்.ஏ.எஸ். சேட்  அளித்த பேட்டி:

புதுக்கோட்டை
16 வது வார்டு அதிமுக வேட்பாளர் அப்துல்ரஹ்மான்

 16 வது வார்டில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில், கண்காணிப்பு (CCTV ) கேமராக்கள் பொருத்தி  ஸ்மார்ட் (SMART ) வார்டாக மாற்றப்படும்.   தோரண வாய்க்கால்களில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்வதற்கு தடைபட்டு பழுதாகி உள்ள இடங்களில் கல்வெர்ட்  (பாலங்கள் அமைக்கப்படும். துப்புரவு பணிகள் மேம்படுத்தப்படும். குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும்.

வார்டில் முக்கிய பகுதிகளில் புகார் பெட்டிகள் அமைத்து அதற்காக பணியாளரை நியமித்து உடனடியாக புகார் மீது நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன்.

வார்டு  பகுதி மக்களுக்காக வாட்ஸப் குழு அமைத்து அந்த   குழுவில் புகார் அளித்தாலே தீர்வு காணப்படும். தனியாக நகர்மன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும், அனைத்து அரசு சான்றிதழ்களும் முறைபடி பெற்று தரப்படும்.  சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். வார்டில் உள்ள அனைத்து நகராட்சி பள்ளிகளும்  ஸ்மார்ட் ( SMART) பள்ளிகளாக மாற்றி அமைக்கப்படும்.

 வார்டில் அனைத்து பகுதிகளிலும் குப்பை தொட்டிகள் அமைக்கப்படும் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்படும்.

என் மீது  நம்பிக்கை வைத்து வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால், எல்லா நேரத்திலும் மக்களில் ஒருவனாக   பாடுபடுவேன் என  அதிமுக வேட்பாளர் அப்துல்ரஹ்மான் உறுதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2  இடங்களில்  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்ட தைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு பிப்.19 -இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.  இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top