Close
நவம்பர் 22, 2024 1:05 மணி

புதுகை நகராட்சி தேர்தல்: ஒரே நாளில் 21 வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பிரசாரம்

புதுுக்கோட்டை

புதுகை நகராட்சி தேர்தலில் நிற்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் எம்ல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தல் பிப்.19 -இல்  நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.  இன்னும் 7 நாள்களே  இருப்பதால் தேர்தல்  களம் வேட்பாளர்களின் பிரசாரத்தால் சூடு பிடித்துள் ளது.

இந்நிலையில்,  புதுக்கோட்டை நகராட்சியில் , 27, 14, 31, 29, 30, 13, 12, 10, 11, 3, 2, 1, 4, 9, 8, 7, 6, 19, 5, 20, 21  ஆகிய அனைத்து வார்டுகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  சனிக்கிழமை மேற்காணும் வார்டுகளில்  பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு  வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை
அமைச்சர் ரகுபதி மேற்கொண்ட பிரசாரத்தில் கலந்து கொண்ட மக்கள்

இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கேகே. செல்லபாண்டியன்,  எம்எல்ஏ டாக்டர் வை முத்துராஜா.நகரச் செயலாளர் க. நைனா முகமது. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில்   187 இடங்களுக்கு பிப்.19 -இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டியிடுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top