Close
நவம்பர் 22, 2024 6:34 காலை

புதுகை நகராட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் பிரசாரம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 27 வது வேட்பாளருக்கான வாக்கு சேகரித்த சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம்

புதுக்கோட்டை நகராட்சிக்கு   27 -ஆவது வார்டில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக  போட்டியிடும் ஏ.எம்எஸ். இப்ராஹிம்பாபு –வுக்கு ஆதரவாக சிவகங்கை மக்களவை தொகுதி எம்பி கார்த்திசிதம்பரம்     கைச்சின்னத்துக்கு  வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் ஆண், பெண் உள்பட மொத்தம் 2,992  வாக்காளர்கள் உள்ளனர்.

காங்கிரஸ்  நகரத்தலைவராக உள்ள இப்ராஹிம் பாபு  ஏற்கெனவே  2 முறை புதுகை நகர்மன்ற உறுப்பினராக வகித்தவர். மூன்றாவது முறையாக தற்போது களம் காண்கிறார்.  இவர் தனது வார்டுக்குள்பட்ட கீழ 2, 3 வீதிகள், சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து, ராணிஸ்கூல் சந்து, பெருமாள்கோவில் வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2, 3, 4 வீதிகள் மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில்,  சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக்சிதம்பரம் புதுக்கோட்டை நகராட்சி 27 -வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து கைச்சின்னத்தில்    வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சி உள்ள 42 வார்டுகளில் திமுக கூட்டணியில் 5 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இவர்களுக்கு ஆதரவாக சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்திசிதம்பரம் சனிக்கிழமை  வேட்பாளர் களுடன் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டனர். திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தான் உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகவில்லை. அவர்களுக்கு தேர்தல் நடைமுறை குறித்து தெரியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக நாட்டுக்கு உகந்தது அல்ல. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறக் கூடிய  நாட்டில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகும்.

2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பயத்திலிருந்து அதிமுக தலைவர்கள் இன்னும் மீளவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தை யாராலும் முடக்க முடியாது. ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்ற விபரீதமான எண்ணத்தில்தான் இது போன்று  அவர்கள் பேசி வருகின்றனர். பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் எல்லாம் மத்திய அரசின் ஏஜென்டுகளாகவே மாறிவிட்டனர் என்றார் எம்பி கார்த்திசிதம்பரம்.

இதில். வேட்பாளர் ஏ.எம்எஸ். இப்ராஹிம்பாபு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன், காங்கிரஸ் முன்னாள் மாநிலச்செயலர் வழக்கறிஞர்ஏ. சந்திரசேகரன், மாவட்டச்செயலர் எம்.ஏ.கே. சேட், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரை திவ்யநாதன், ஜி.எஸ். தனபதி, தீன். குட்லக் மீரா,  அப்துல்லா மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top