Close
நவம்பர் 24, 2024 10:18 காலை

மதுரை சித்திரை திருவிழா: 2 ஆண்டுகளுப்பின் நடைபெறுவதாக அறிவிப்பு

மதுரை

அழகர்கோயில் கள்ளழகர்

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். இந்த சோலை மலையில் அமைந்திருக்கும் கோயிலில் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக தடைபட்டு இருந்த சித்திரைத் திருவிழா இந்த வருடம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருட்ஷம், சிம்ம வாகனம்.

ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்.ஏப்ரல் 07, 2022 – வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்.ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு.ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்.

மதுரை
மதுரை அருகேயுள்ள அழகர்கோயில்

ஏப்ரல் 10, 2022 – ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்.ஏப்ரல் 11, 2022 – திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்.ஏப்ரல் 12, 2022 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா.ஏப்ரல் 13, 2022 – புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா.ஏப்ரல் 14, 2022 – வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானைவாகனம்,   புஷ்பபல்லக்கு.

ஏப்ரல் 15, 2022 – வெள்ளிக்கிழமை – திருத்தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம். ஏப்ரல் 15, 2022 – வெள்ளிக்கிழமை – தீர்த்தம், வெள்ளி விருச்சபை சேவை, அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை.ஏப்ரல் 16, 2022 – சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு).

ஏப்ரல் 17, 2022 – ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்.

ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம். ஏப்ரல் 19, 2022 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top