புதுக்கோட்டை நகராட்சியின் 21 -ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மலர்விழிமுத்து வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை நகராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் 21 -ஆவது வார்டில் மலர்விழிமுத்து போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 2006-11 மற்றும் 2011-16 ஆகிய ஆண்டுகளில் நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்து வார்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்த வார்டில் ஆண், பெண் உள்பட மொத்தம் 3,140 வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் களம் காணும் மலர்விழிமுத்து தனது வார்டுக்குள்பட்ட ஈஸ்வரன்கோவில் தெரு, வஉசி நகர், மாயாண்டிசாமி நகர் சின்ன ரயில்வேகேட், பொன்னையா ஊருணி, வேளார் தெரு, காட்டுமாரியம்மன்கோவில், கம்பர் தெரு, முஸ்லிம் தெரு, செட்டி தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச்சென்று இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது வார்டு மக்களுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து வேட்பாளர் மலர்விழிமுத்து கூறியது:
1.காட்டுமாரியம்மன் கோவில் / வேளார் தெரு மாயாண்டி சாமி நகர் மக்களுக்கு காவேரி குடிநீர்பதவி ஏற்ற 15 நாட்களில் செய்து கொடுப்பேன்.
2. சின்ன கேட் தார் சாலை / சின்ன கேட் கிழக்கு பகுதி சந்து சிமெண்ட் சாலை.
3. வ.உ.சி நகர் அனைத்து வழிகளில் தார்சாலை வசதி செய்து கொடுக்கப்படும்.
4. பொன்னப்பன் ஊரணி வடகரை சுற்று நடைபாதை பாதியில் நிற்கின்றது. அதனை முழுமையாக செய்து கொடுக்கப்படும்.
5. திருவப்பூர் சுடுகாடு மின் மையானம் செய்து கொடுக்கப்படும்.
6. நமது வார்டில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டம் ஒரு சில விதிகளால் நகராட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
7. ஈஸ்வரன் கோவில் தெரு, வடக்கு சந்து, சிமெண்ட் சாலை வசதி செய்து கொடுக்கப்படும்.
8. கலிபுல்லா வீட்டு சந்து சிமெண்ட் சாலை அமைக்கப்படும். வைத்தியர் வீடு சந்து சிமிண்ட் சாலை அமைக்கப்படும்.
9. அனைத்து வீதிகளிலும் மழைநீர் வடிகால் கட்டப்படும்.
10. நமது வார்டில் அனைத்து வீதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்
11. புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்படும்.
12. தேரோடும் வீதிகளில் தேருக்கு இடையூறாக இல்லாமல் மின் சம்பந்தப்பட்ட பணிகள் செய்து கொடுக்கப்படும். வார்டில் அவ்வப்போது மக்கள் சொல்லும் குறைகள் உடனுக்கு உடன் சரிசெய்து கொடுக்கப்படும். வார்டு மக்கள் போன் செய்த உடன் நேரில் வந்து குறைகள் சரி செய்து கொடுக்கப்படும்.
13. வ.உசி நகர் சுடுகாடு சாலை அமைக்கப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் மலர்விழிமுத்து.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டி யிடுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிப்.19 -இல் தேர்தல் நடைபெறுகிறது.