ரோட்டரி மாவட்டம் 3000 தின் 2022-23 -ஆம் ஆண்டிற்கான சேவை திட்டங்கள் மற்றும் ஆண்டு டைரக்டரி குறித்த கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட வருங்கால ஆளுநர் ஐ. .ஜெரால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டின் கனவுத் திட்டமான (Rotary study centre) நோக்கம் குறித்தும் அதை எப்படி செயல் படுத்துவது என்றும் விரிவாக பேசி கையேடு வழங்கினார்.
கூட்டத்தில் சேவை திட்ட சேர்மன் அல்லிராணிபாலாஜி குறுங்காடுகள் அமைப்பது, குளங்கள் தூர் வாரும் பணிகளை மேற்கொள்வது குறித்து பேசினார், டைரக்டரியின் சிறப்பம்சங்களை பற்றி சேர்மன்கள் ஜெ.சங்கரன், ஏ.சுக்குந்தர்சிங் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு மண்டல செயலாளர்கள் (அட்மின்) வி.ஆர்.வெங்கடாசலம், ஏ.பாண்டியன் ஆகியோர் மரியாதை செய்தனர். கூட்டத்தில் துணை ஆளுநர்கள் லூர்துநாதன், கருப்பையா, முருகராஜ், சேவியர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் கே.கான்அப்துல்கபார்கான், சி.பாலசுப்பிமணியன், சங்கத் தலைவர்கள், திட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.