Close
செப்டம்பர் 20, 2024 5:51 காலை

கவிஞர் தங்கம்மூர்த்தி இல்ல மணவிழாவில் தமிழினி புலன குழு சார்பில் சீர்வரிசை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி  இல்ல திருமண விழாவில்  மணமக்களுக்கு  தமிழினி புலன குழு நிர்வாகி மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி தலைமையில் வழங்கப்பட்ட தமிழினி புலன சீர் வரிசை

புதுக்கோட்டையில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி  இல்ல திருமண விழாவில்  மணமக்களுக்கு  தமிழினி புலன குழு நிர்வாகி மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி தலைமையில் சார்பில் பாரம்பரிய முறைப்படி மேளதாளங் கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட ஒன்பது மாட்டு வண்டிகளில் தமிழ் வளர்த்த புலவர்களின் புத்தகங்கள்  சீர் வரிசையாக கொண்டு செல்லப்பபட்டன.

இந்த வண்டிகளில் திருவள்ளுவர், ஔவையார், இளங்கோ, கம்பர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி ஆகியோரின் படைப்புகள் வைக்கப்பட் டிருந்தன.

இந்த  மாட்டு வண்டிகள் வரிசையாக அணிவகுக்க  கைகளிலும் புத்தகங்கள், முக்கனிகள் மற்றும் பூக்களை மகளிர்  ஏந்தியபடி மேளம் உருமி உள்ளிட்ட பாரம்பரிய இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக மணமக்கள் காவியாமூர்த்தி-சுதர்சன் தம்பதியருக்கு  தமிழினி புலன குழுவினரின் தமிழினி சீர்வரிசை  வழங்கப்பட்டது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், காவல்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், ஊடகம் சார்ந்தவர்கள் என  தமிழகம் மட்டுமின்றி பல நாடுகளில் இருக்கக்கூடியவர்கள் தமிழினி கட்செவி அஞ்சல்(வாட்ஸ் அப்) வழியாக தமிழை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து நாள்களிலும் கவிதை, கட்டுரை, கதை என தமிழ்சார்ந்த போட்டிகளை நடத்தி  குழுவில் விழா எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பண்டிகை நாள்களில் மகிழ்வான தருணங்களை பதிவு செய்து உற்சாகத்தை பரிமாறிக் கொள்கிறார்கள்.இப்படியாக பல்வேறு ஆரோக்கியமான நிகழ்வுகளை முன்னெடுத்து மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி  தமிழினி  குழுவை வழி நடத்தி இது போன்ற மகிழ்வான தருணங்களை கொண்டாடி  வருவது குறிப்பிடத்தக்கது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top