Close
நவம்பர் 22, 2024 2:28 காலை

தஞ்சையில் உலகத் தாய்மொழி நாளில் உறுதி ஏற்பு

தஞ்சாவூர்

உலக தாய்மொழி நாளையொட்டி தஞ்சையில் தமிழ்அமைப்புகள் சார்பில் நடந்த உறுதி ஏற்பு நிகழ்வு

 தஞ்சையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாளில்  எல்லா ருக்கும் கல்வி அளிக்க வேண்டும். எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.

 ஐநா மன்றம் கடந்த 2000 ஆவது ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி நாளாக அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .தமிழ்நாட்டில் தாய் மொழி தமிழ் மொழி காக்க இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டங் கள் நடைபெற்று வந்துள்ளது.

உலக தாய் மொழி நாள் நிகழ்ச்சி, தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில்  மாலை  நடைபெற்றது.

நிகழ்விற்கு முனைவர் மு.இளமுருகன் தலைமை வகித்தார். நாட்டார் கல்லூரி தாளாளர் விடுதலை வேந்தன் முன்னிலை வகித்தார். தமிழ் பண்பாட்டு துறை முன்னாள் இரா. குணசேக ரன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் மு.தமிழ் மாறன், மக்கள் அதிகாரம் மாநி ல பொருளாளர் காளியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பேராசிரியர் கண்ணதாசன் , புலவர்கள் குருசாமி கோபால கிருஷ்ணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் ராவணன் ,சமூக ஆர்வலர்கள் மதிவாணன் ,தேவா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் தமிழ்ஆட்சி மொழியாகவும், வழிபாட்டு மொழி யாகவும் அமல்படுத்தப்பட வேண்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், திருக்கோயில்களில் அனைத்து சாதி யினரும் தமிழில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எல்லோருக்கும் கல்வி, எல்லா களல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக தாய் மொழி தமிழ் மொழிகாக்க உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top