Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

மருத்துவமனை நிறுவன சட்டம் மூலம் அனைவரும் பதிவு செய்ய வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் தீர்மானம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை உறுப்பினர்களின் செயற்குழு கூட்டம் ஐ எம் ஏ ஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் த. சுவாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் அ. முஹம்மது சுல்தான் வரவேற்றுப் பேசினார்.

தலைவர் டாக்டர் த. சுவாமிநாதன் பேசியபோது:  இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் முக்கிய தீர்மானங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா மற்றும் போலியோ வைரஸால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரசு சிறப்பாக செயல்படுவதை வாழ்த்தியும் உறுப்பினர்கள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .
நம் உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து செயல்படும் வண்ணம் ஐ.டி.எஸ்.பி யில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நோய்களையும் அரசிற்கு உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.  அலோபதி மருத்துவர்கள் அலோபதி மருந்தை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்.  நம் மருத்துவத்தை பிறர் கையாள்வது குறித்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
நகரில் சாக்கடை மற்றும் திறந்து வைத்திருக்கும் கழிவுநீர் மூலம் கொசு பரவுவதை அதனால் ஏற்படும் விளைவுகளையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை நிறுவன சட்டம் மூலம் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து பதிவு சான்று கிடைக்காத வர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறறப்பட்டன.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் வெங்கடசுப்பிரமணியம், தீக்காயங்களால் ஏற்படும் விளைவுகள் அதனை கையாளும் முறைகள் குறித்து தொடர் மருத்துவ கல்வி திரை மூலம்  விளக்கமளித்தார்.

நிறைவாக பொருளாளர் டாக்டர் மா. கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top