Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

புதுக்கோட்டையில் தடையை மீறி ஒற்றுமை பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை.யில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்

புதுக்கோட்டையில் தடையை மீறி ஒற்றுமை பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வியாழக்கிழமை கைது. செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தேசிய பிரசாரத்தை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம், சேலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தேசி பிரசாரத்தை முன்வைத்து ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை நடத்த போலீஸார் ஏற்கெனவே அனுமதி மறுத்திருந்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்டது. இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அணிவகுப்பு பேரணியானது பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தபோது போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைபடுத்து போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்று தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்

பின்னர் செய்தியாளர்களிடம்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத் தலைவர்

ஹாலித் முகம்மது கூறியதாவது:

சமூக நீதி காவலன் என்று கூறிவரும் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக மாநாடு நடத்தினாலும் வேறு எந்த கட்சிகள் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தினாலும் அணிவகுப்பை நடத்துகின்றனர். இதேபோல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்துகின்றது. அதற்கெல்லாம் அனுமதி வழங்கிய தமிழக அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்படும் ஒற்றுமை அணிவகுப்புக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறது என்று புரியவில்லை.

மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான அரசாங்கமாக இல்லாமல் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசாக  தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஒற்றுமை பேரணிக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top