Close
நவம்பர் 22, 2024 1:46 மணி

புதுக்கோட்டை அருகே நேரிட்ட தீவிபத்தில் 6 வீடுகள் சேதம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பகுகியை பார்வையிட்ட எம்எல்ஏ- முத்துராஜா

புதுக்கோட்டை மாலையீட்டிலுள்ள முல்லை நகரில் மின்கசிவு காரணமாக 6 வீடுகள் எரிந்து சேதமடைமடைந்தன. இதில்பல லட்சம் மதிப்பிலான பொருட்கள்  தீயில் கருகியது.

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள முல்லை நகரில் வெள்ளிக்கிழமை ஒரு குடிசை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள்   தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர், ஆனால் ஒரு வீட்டில் பிடித்த தீ அருகில் உள்ள மற்ற குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளும் பரவியது இதனால் பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் பெரிதும் சிரமப்பட்டனர்.

இது குறித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் ஆனால் அதற்குள் தீப்பற்றிய நான்கு குடிசை வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது மேலும் இரண்டு ஓட்டுவிடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் தப்பியது.

ஆனால் குடிசை வீடுகளில் பற்றிய தீயினால் குடிசை வீட்டிற்குள் இருந்த பீரோ கிரைண்டர், டிவி, மிக்ஸி, குடும்ப அட்டைகள் ஆதார் அட்டைகள் மற்றும் விளையாட்டு சான்றிதழ்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் அந்த வார்டு கவுன்சிலர் காதர்கனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினால் வீடுகளை இழந்த தவித்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்குதேவையான அனைத்து உதவிகளையும்செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் தீ விபத்தினால் வீடுகளை இழந்து தவித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.4000 நிதி உதவியை முல்லை முபாரக் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top