Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: கூடுதல் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம்

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு

2017-2018 ஆம் ஆண்டிற்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 வெளியிடப்பட்டது.

இவ்வறிவிக்கையின்படி விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய விண்ணப்பத்தினை இணையவழியில் (Online) பதிவேற்றம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விண்ணப்பங்களுடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்களையும் (Photo Copies) பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் தெரிவிற்கான தேர்வுகள் 08.12.2021 முதல் 12.12.2021 வரை கணினி வழியில் (CBT) நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியி டப்பட்ட நிலையில் அடுத்தக்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு தொரடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டியுள் ளதால் பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதலாகக் (Photo Copies) செய்யக்கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கீழ்க்காணும் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்:

1. UG Degree or Provisional Certificate of UG. 2. UG Mark sheets or Statement of Marks.

3. Equivalence G.O. for UG Degree, if applicable. 4. PG Degree or Provisional Certificate of PG.

5. PG Mark sheets or Statement of Marks.

6. Equivalence G.0. for PG Degree, if applicable.

7. M.Phil. Degree or Provisional Certificate. 8. M.Phil. Mark sheets or Statement of Marks.

9.Equivalence G.O. for M.Phil, if applicable.

10. Ph.D Degree.

11. Equivalence G.O. for Ph.D, if applicable / Equivalence Certificate obtained from Association of Indian Universities, New Delhi (If Ph.D obtained from Foreign University).

12. Conduct Certificate from Head of the Institution (Last studied).

அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அரசு / உதவி பெறும் / சுயநிதி பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த தொழில்நுட்பக்கல்வி இயக்குநரிடம் (Director of Technical Education) மேலொப்பம் (Counter Signature) பெற்றிருத்தல் வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (Deemed University) கற்பித் தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த நிகர் நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் (Registrar of Deemed University) மேலொப்பம் (Counter Signature) பெற்றிருத்தல் வேண்டும்.
அரசு / உதவிபெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த கல்லூரிக்கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநரிடம் (Regional Joint Director of Collegiate Education) மேலொப்பம் (Counter Signature) பெற்றிருத்தல் வேண்டும்.) பணிநாடுநர்கள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களை  11.03.2022 தேதியிலிருந்து 18.03.2022 தேதிக்குள்  TRB Website-இல் பதிவே ற்றம் செய்யவேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ் களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள சான்றிதழ் களின் Original சான்றிதழ்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப் பின் போது (Certificate verification) கூர்ந்தாய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும் பதிவேற்றம் செய்யப்படாத சான்றிதழ்கள் அல்லது புதிய சான்றிதழ்கள் அறிவிக்கை (Notification) 13 (c) -ல் குறிப்பிட்டுள்ளவாறு சான்றிதழ் சரிபார்ப்பின் போது கூர்ந்தாய்விற்கு எடுத்துக் கொள்ளப் படமாட்டாது.

மேலும், முழுமையான விவரங்கள் அளிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது தவறான தகவல்களை அளித்திருந் தாலோ அவ்விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அறிவிக்கை (Notification) 13 (d) -இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நிராகரிக்கப்படும் .இவ்வறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப் பங்களும் நிராகரிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிட் டுள்ள கைபேசிஎண்கள் வாயிலாகத் தொடர்புகொள்ளலாம். 9444630068 –  9444630028. மேலும், எழுத்து மூலமாகத் தொடர்பு கொள்ள விரும்பு விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும்  trbpolytechnicgrievance19@gmail.com மின்னஞ்சல் முகவரி வாயிலாகத் தொடர்புகொள்ளலாம்.என்று ஆசிரியர் தேர்வு வாரியம்  தகவல் வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top