புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் புதுக்கோட்டை இந்திய மயக்கவியல் மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய மகளிர் தினம் மற்றும் கருத்தரங்கம் புக்கோட்டை இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வுகளுக்கு மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சாமிநாதன் தலைமை வகித்தார். டாக்டர் ரா.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் முகமது சுல்தான் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநரர் சுவாதி ரெத்தினாவதி பங்கேற்று, டாக்டர் கலைவாணி, டாக்டர் திலகவதி, டாக்டர் தமிழ்மணி ஆகியோருக்கு மகளிர் தின விருதுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,: பெண்குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும்,ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
தலைவர் டாக்டர் சாமிநாதன் பேசுகையில், பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவே புதுக்கோட்டை இந்திய மருத்துவசங்கத்தில் பெண் செயலாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது, பெண்சிசுவை பாதுகாக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை கிடைக்க அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பெண் உரிமை காக்க தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து செயல்படும் என்று கூறி வாழ்த்துகளை கூறினார். .தொடர் மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் மஞ்சுளா நந்தகுமார் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் திரைமூலம் விளக்கமளி
விழாவில் மருத்துவர்கள் குழந்தைகளின் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் டாக்டர்கள் சலீம், பொருளாளர் கோபால கிருஷ்ணன், பார்த்தசாரதி, ஜானகி