Close
நவம்பர் 21, 2024 6:32 மணி

புதுக்கோட்டை நகராட்சி பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த விழாவில் போஸ் நகர் மின் மயானத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை சமூக ஆர்வலர்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மரம் நண்பர்கள் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா மற்றும் நகராட்சி பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை சில்வர் ஹாலில்  நடைபெற்றது.

விழாவிற்கு திருக்குறள் கழகத்தலைவர் க.ராமையா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக  புதுக்கோட்டை நகர் காவல் துணை கண்காணிப்பாளர்  லில்லிகிரேஸ் பங்கேற்று பேசுகையில்,  சமூகத்தின் முக்கிய அங்கமாக சுகாதாரப் பணியாளர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். எங்களைப் போன்றவர்களை விட உங்களைப் போன்றவர் களின் தேவைதான் சமூகத்துக்கு முக்கியமான இருக்கிறது.

நீங்கள் புத்திசாலிகளாகவும், ஆற்றல்மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.இவ்வுலகம் தூய்மையாகவும், சுகாதர மாகவும் இருப்பதற்கு நீங்களே காரணம். மற்றவர்கள் பேரில் தாங்கள் காட்டுகிற அக்கறை போன்று உங்களுடைய நலனிலும் அக்கறை கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இதைமுன்னிட்டு,  மூத்த பெண் சுகாதாரப் பணியாளர்கள் மூவரு  சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் அனைத்து பெண் சுகாதாரப் பணியாளர்களும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத்தலைவர் எம்.லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் லதா கருணாநிதி, எஸ். மூர்த்தி  பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உலக மகளிர்தின விழாவில் பங்கேற்ற மகளிர்

இதில், திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தயானந்த சந்திரசேகரன்,சந்திரா ரவீந்திரன், லதா உத்தமன், ஆரோக்கியசாமி, ராமுக்கண்ணு, சொக்கலிங்கம், ராஜாமுகமது, கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் தனது வரவேற்புரையில்,  நகராட்சி சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவத் தயாராக இருப்பதாகவும், முழுக்கல்விச் செலவையும் ஏற்க பலர் முன் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவை , புதுக்கோட்டை மாவட்ட இந்திய ரெட்கிராஸ் சங்க தலைவர் சீனு.சின்னப்பா ஏற்பாடு செய்திருந்தார்.நிறைவாக பிரபு நன்றி கூறினார். விழாவில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top