Close
நவம்பர் 22, 2024 6:20 காலை

ஆண்மை எனும் வேடம்… மைதிலி கஸ்தூரிரங்கன்

கவிதை

நாளும் ஒரு கவிதை

ஆணவக்கொலைகள், ஆஷிபாக்கள் என்றே நிறுவுகிறார்கள்
அவர்கள் ஆண்மையை.. அவர்கள் பிரியாணியே சாப்பிட்டிருக்கலாம்.

அவள் முக்காடு இல்லை அந்தக் கைகளில் இருக்கும் புத்தகமே உறுத்துகிறது.

அவர்கள் கண்களை என்பது பாவம், அவர்கள் கொம்பு சீவி விட்ட செம்மறி ஆடுகள் அறியாச் செய்தி!

காளைகளைப் பிரித்து சிங்கம் வேட்டையாடிய கதையை காளையின் சந்ததிகள் அறிந்தனவோ இல்லையோ இந்தச் சிறுநரிகள் தெரிந்தே இருக்கின்றன.

வேங்கையை முறத்தால் விரட்டியவள் மண்ணில் இந்த வேடதாரிகளை மட்டும் விட்டுவைத்தல் தகுமா?

> கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்

1 Comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 Comment
scroll to top