தர்மபுரியில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவிலும் , பென்னாகரத்தில் இருந்து 16 கிமீ தொலைவிலும் அமைந்து ள்ளது ஓகேனக்கல். கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது . ஓகேனக்கல் புகையும் நீர் திவலைகளும் அதன் வெளியை கவர்ந்து இருப்பதால் உருவான பெயர் ஒகேனக்கல்.
இந்த சுற்றுலாதளத்தில் ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் கோடை வெயிலின் தாக்கத்தால் அருவியில் நீராடி காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்து இயற்கை அழகினை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
.
தருமபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக ஒகேனக்கல் திகழ்ந்துவருகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழவும் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாகா பகுதிகளி லிருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஒகேனக்கல் வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைந்ததாலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடியும் சுவையான மீன் உணவு வகைகளை உண்டு ரசித்து, பாதுகாப்புடன் பரிசலில் பயணம் செய்தும், ஐந்தருவி, சினி பால்ஸ், முதலைப் பண்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகினை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் கடந்த சில வாரங்களை காட்டிலும் இந்த வாரம் விடுமுறை நாளான ஞாயிறன்று
கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.