Close
நவம்பர் 22, 2024 10:05 காலை

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு புதிதாக இரயில் தடம் அமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை

புதுகை.நடந்த சாலைலபெற்ற் ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க சிறப்பு கூட்டம் சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் மாருதி கார் கேர் வளாகத்தில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் பொருளாளர் C.பிரசாத் வரவேற்றார் சென்ற‌ மாத அறிக்கையினை துணைத் தலைவர் AMS.இப்ராஹிம் பாபு வாசித்தார் கூட்டத்தில் (1)நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நகர்மன்ற தலைவர் திருமதி திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி, மற்றும் வெற்றி பெற்ற அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது
(2) தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு புதிதாக இரயில் தடம் அமைக்க ஆரம்பக்கட்ட ஆய்வு முடிந்துவிட்ட நிலையில் உடனடியாக அமைக்க கோரி மக்களவையிலும் மற்றும் மாநிலங்களவையிலும் குரல் கொடுத்து பேசிய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  S.திருநாவுக்கரசர் அவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு MM.அப்துல்லா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
(3) புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றிட மிக முனைப்பாக செயல்பட்டு கொண்டுள்ள மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கும் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர் KK.செல்லபாண்டியன் அவர்களுக்கும் புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
(4) புதுக்கோட்டை நகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் தொடர் விபத்துக்களும் ஏற்படுகிறது அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை சீரமைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் புதுக்கோட்டை கீழராஜவீதியில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் ஒருவழிப்பாதையில் செல்லும் வகையில் கீழராஜவீதியையும் அதேபோல அருகிலுள்ள கீழ2ஆம் வீதியையும் ஒரு வழிப் பாதையாக மாற்றி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கீழ2ஆம் வீதியில் சென்று தெற்கு 4ஆம் வீதி வழியாக செல்லும் வகையில் முற்றிலும் ஒருவழிப் பாதையாக மாற்றியும் தெற்கிலிருந்து வடக்காக செல்லும் வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து கீழராஜவீதி வழியாக சென்று பிருந்தாவனம் சென்றடையுமாறு ஒரு வழிப்பாதையாக மாற்றியும் உத்தரவிட வேண்டும்என்று வலியுறுத்தப்படுகிறது.

(5) அண்ணா சிலையிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் தெற்கு 4ஆம் வீதி சாலையை தண்டபாணி ஆலயம் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றியதோடு NO PARKING ZONE ஆக மாற்றம் செய்வதோடு அறிவிப்புப் பலகையும் வைக்க வேண்டும்

(6)பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
(7) புதுக்கோட்டை நகருக்குள் செல்லும் தனியார் பேருந்து அதிவேகமாக செல்வதை கட்டுப் படுத்த வேண்டும்
(8) தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை வரும் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு மாற்று வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும்
(9) மாவட்ட விளையாட்டு மைதானத்தின் வாசலில் வேகத்தடை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல் துறை, மற்றும் சம்மந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை மணு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் A.சந்திரசேகர், துணை செயலாளர் KLKA.ராஜாமுகமது R.சிவக்குமார், M.முகமது அப்துல்லா, விளையாட்டு ஆசிரியர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர் நிறைவாக செயலாளர் R.ஆரோக்கியசாமி நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top