Close
செப்டம்பர் 20, 2024 4:26 காலை

கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். பொன்னமராவதி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மிகவும் பயபக்தியுடன் வணங்கி வழபாடு செய்யப்பட்டு வரும் ஆலயமாகத் திகழ்கிறது.

இக்கோயில் அமைந்துள்ள இடம் முன்பு பெரும் காடாக இருந்தது, அப்போது இவ்வட்டாரத்தில் ஆலயம் ஏதும் இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் அருகேயுள்ள வேகுப்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீஏனமாரியம்மனை வழிபட்டு வந்தனர்.

அக்கோயிலுக்கு தரிசனம் செய்யவும், வியாபாரத்திற்காக பால் எடுத்து செல்கையில் தற்போது அம்பாள் வீற்றிருக்கும் இடத்தில் இருந்த கொன்னை மரத்தின் வேர் தடுக்கி பால் பூமியில் கொட்டும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மேலும் கிராமத்தினர் கொன்னை மரத்தடியில் அம்பாள் எழுந்தருளியுள்ளதாக அசரீரி வாக்கை கேட்டதாக கூறியவுடன் அனைவரும் ஒன்று கூடி கொன்னை மரத்தடியில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அதன் காரணமாகவே இத்தலம் கொன்னையூர் என அழைப்படுவ தாகவும் வரலாறு கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனித்திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும். அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாண வேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால்குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

அதைத் தொடர்ந்து ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி 15 நாள்கள் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் வழிபாடு நடைபெறும்.15 -ம் நாளன்று நடைபெறும் பொங்கல் திருவிழாவில், இதில் கோயிலுத்து பாத்தியப்பட்ட பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி ஆகிய ஊர்களிலிருந்து பங்கேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழாண்டின் பங்குனி பொங்கல் திருவிழா20.03.2022 ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 21.03.2022 (திங்கள்கிழமை) அக்கினிக் காவடி.

10.04.2022 (ஞாயிற்றுக்கிழமை),  11.04.2022 (திங்கட்கிழமை), 12.04.2022 (செவ்வாய்க்கிழமை) ஆகிய 3 நாட்கள் பொங்கல் சிறப்பு பெருந்திருவிழா நடைபெறும்.

11.04.2022 – திங்கட்கிழமை கோயிலுக்கு சிறப்பு வருகை தரும் நாடுகள்: 1. பொன்னமராவதி நாடு, 2.செவலூர் நாடு,
3.ஆலவயல் நாடு, 4. செம்பூதி நாடு. (நாடு வருதல் என்பது  திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்)

மண்டகப்படிதாரர்கள் விவரம்: 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை- பொன்னமராவதி நாடு. காப்புக்கட்டுதல்.

28.03.2022-திங்கட்கிழமை- 1 -ஆம் நாள் மண்டகப்படி. கொள்னைப்பட்டி ஊரார்கள்,

29.03.2022- செவ்வாய்க்கிழமை- 2-ம் நாள் மண்டகப்படி. மூலங்குடி, ரெட்டியாபட்டி ஊரார்கள்.

30.03.2022- புதன்கிழமை- 3-ம் நாள் மண்டகப்படி, காட்டுப்பட்டி ஊரார்கள்.

31.03.2022-வியாழக்கிழமை-4-ம் நாள் மண்டகப்படி, எழுபது மொட்டையா கோனார்கள்.

01.04.2022-வெள்ளிக்கிழமை- 5-ம் நாள் மண்டகப்படி,  பொன்னமராவதி ஊரார்கள்.

02.04.2022-சனிக்கிழமை- 6-ம் நாள் மண்டகப்படி, செம்பூதி ஊரார்கள்

03.04.2022-ஞாயிற்றுக்கிழமை- 7-ம் நாள் மண்டகப்படி, ஆலவயல் ஊரார்கள்.

04.04.2022-திங்கட்கிழமை- 8-ம் நாள் மண்டகப்படி, நகரத்தார்கள்.

05.04.2022-செவ்வாய்க்கிழமை-9-ம் நாள் மண்டகப்படி,இடங்கை வலங்கை.

06.04.2022-புதன்கிழமை-10-ம் நாள் மண்டகப்படி, மேலமேலநிலை, மலம்பட்டி ஊரார்கள்.

07.04.2022 -வியாழக்கிழமை-11-ம் நாள் மண்டகப்படி, தேனூர் ஊரார்கள்.

08.04.2022 -வெள்ளிக்கிழமை-12-ம் நாள் மண்டகப்படி,  அரண்மனையாளர்கள்.

09.04.2022-சனிக்கிழமை- 13-ம் நாள் மண்டகப்படி, ராங்கியர்.

10.04.2022 -ஞாயிற்றுக்கிழமை-  14-ம் நாள் மண்டகப்படி, கொன்னைப்பட்டி ஊரார்கள் மற்றும் பூஜகர்கள்.

11.04.2022- திங்கட்கிழமை-15-ம் நாள் மண்டகப்படி,பேட்டையார் மற்றும் தொழிலாளர்கள்.

இக்கோயில் புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் சுமார் 37 கிமீ தொலைவில் உள்ளது. கோயில் நடை திறக்கும் நேரம்- காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top