நாடுதழுவிய (மார்ச் 28,29 தேதி) வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட விலை வாசி உயர்வை தடுக்க தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிராக, தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்காக திருத்தம் செய்தது, மின்சார சட்டத் திருத்தம்- 2020, சுற்றுச்சூழல் வரைவுத் திட்டம் -20 கைவிடவும் , மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணமாக்கும் தேசியபணமாக்கல் கொள்கை.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதியை அதிகப்படுத்தவும், இத்திட்டத்தை நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல் படுத்த வேண்டும், நலவாரியங்களை சீர்குலைக்கும் செயல்களை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கைத்தறித் துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், மீன்வள திருத்த சட்டம், சாகர்மாலா திட்டம் உள்ளிட்ட மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை கைவிட வேண்டும். தமிழக மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யவும், புதிய கல்விக் கொள்கை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28,29 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் செயல்படுகின்ற தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் பங்கேற்றன.
தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், சிஐடியூமாவட்ட செயலாளர் சி.ஜெயபால் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் சி.சந்திரகுமார், க.அன்பழகன், வெ.சேவையா, துரை.மதிவாணன், பி.அப்பாத்துரை, பி.செல்வம், எஸ்.கோடிஸ்வரன், டி.கோவிந்தராஜ் , கே.அன்பு , கே.எஸ்.முருகேசன், எஸ.செங்குட்டுவன், ஜெ.வெங்கடேசன், ஈ.டி.எஸ். மூர்த்தி, முனியாண்டி, பரத், பி.ராஜேந்திரன், எட்வின்பாபு,பாஸ்டின் ஏ.ரவி,க.சரவணன், மோகன்தாஸ் ,செல்வம், குலோத்துங்கன், பி. ரமேஷ் ,கண்ணன், ஆலம்கான் உள்ளிட்டு திரளாக தொழிலாளர்கள் பங்கேற்றனர்.