Close
நவம்பர் 22, 2024 6:00 மணி

தொலைந்து போன ஆவண அறிக்கை ( LDR ) பெற காவல் நிலையம் செல்ல தேவையில்லை

காவல்துறை

அசல் ஆவணங்கள் தொலைந்து போனால் ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம்

பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் நடைமுறையில் உள்ளன.

பொதுமக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் (http://eservices.tnpolice.gov.in) மூலம் இரண்டு புதிய இணையதள வசதிகளை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கிற்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் பெரும் வசதி மற்றும் தொலைந்து போன அசல் ஆவணங்கள் பற்றிய புகார் அளிக்கும் வசதி.
பாதிப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்கிற்கு தேவையான ஆவணங்களை இணையதளத்தில் பகிர்தல்.
.
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்றுக்கொள்ள வசதியாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பெறலாம்.

புலன் விசாரணையின் போது காவல்துறையில்பதிவு செய்யப்பட்ட  அவர்களது மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு பயனீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ரூ.10/- ஒரு ஆவணதிற்கு செலுத்தி ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதலாக பதிவிறக்கம் செய்த ஆவணத்தின் நகலானது பயனீட்டாளரின் மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பப்படும். தொலைந்து போன ஆவண அறிக்கை (LDR) சில ஆவணங்கள் தொலைந்தது குறித்து அறிக்கை செய்வதற்காக ஆன்லைன் வசதியும் காவல் இணையத்தளத்தின் ஊடக குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம்  உங்களுடைய , கடவுச்சீட்டுஆர்.சி. புத்தகம் , ஓட்டுனர் உரிமம் , பள்ளி / கல்லூரி சான்றிதழ் , ஐடி கார்டுகள் ( PASSPORT , VEHICLE REGISTRATION CERTIFICATE , DRIVING LICENSE , SCHOOL / COLLEGE CERTIFICATE AND ID CARD ) தொலைந்து போனால் நீங்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து MISSING CERTIFICATE வாங்க வேண்டிய நிலை இனி இல்லை . https://eservices.tnpolice.gov.in / CCTNSNICSDC/ LostDocumentReport என்ற தமிழ்நாடு காவல் துறை இணைய தள முகவரியில் நீங்கள் புகார் பதிவு செய்து புகார் பதிவு சான்றிதழ் ( Lost DOCUMENT REPORTING ) பெற்றுக் கொள்ளலாம்.

காவல்துறையில் புகார் அளித்து ஒப்புதல் பெறும் செய்முறை யும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP அடிப்படையில் அங்கீகாரம் உறுதி செய்யப்படும். ஆதார் கார்டு , பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசால் வழங்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.

தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண அறிக்கை (LDR) ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணு டன் உடனடியாக பயனீட்டாளாருக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த அறிக்கையின் நகலை அவரின் மின்னஞ்சல் கணக்கிற்கு உடனுக்குடன் அனுப்பப்படும். ஆவணம் வழங் கும் அதிகாரிகளால் LDR ன் உண்மைத் தன்மையை சரிபார்க் க இணையதளத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top