Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவமுகாம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான பொது மருத்துவம், பல் மற்றும் கண் பரிசோதனை முகாமினை  குழந்தைகள் காப்பக வளாகத்தில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்தியது.

இம்முகாமிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், ஓவியர் ரவி, கதிரேசன், மனோகரன், ஜான் பிரபு, சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி மாவட்டம் 3000த்தின் துணை ஆளுநர் ஜி.எஸ்.எந். சிவாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கிவைத்தார்.

இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் மகப்பேறு மருத்துவர் ஜான்சிராணி முனியன், பல் மருத்துவர் மேரி கிறிஸ்டினா பெர்லின், அரசு முதுநிலை கண் பரிசோதகர் அன்னை பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று காப்பகத்தில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும், மாணவிகள் அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள், டூத் பிரஷ் மற்றும் எழுது பொருட்களும் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை காப்பாளர் பரமேஸ்வரி உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top