பள்ளியில் பூத்த ஊதாப் பூ மழலைகள்..
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக வண்ண தினங்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஊதா வண்ண தினம் கொண்டாடப்பட்டது. “ஊதா ஊதா ஊதாப் பூ” என்பதாக, கேஜி குழந்தைகள் ஊதா வண்ண உடையணிந்து வளையல் ஜிமிக்கி செருப்பு என எல்லாம் ஊதா மயமாக மாறியிருந்தன.
ஊதா வண்ணத்திலான பொம்மைகள் பந்துகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். கேஜி வகுப்பறைகள் ஊதா பாலூன்கள் சாக்லேட்டு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டன.
பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குழந்தைகளோடு குழந்தையாக ஊதா நிற உடையணிந்து இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார். வண்ண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை கௌரி, ஆசிரியைகள் சந்திர கலா, பிரியதர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.