Close
நவம்பர் 22, 2024 6:20 மணி

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவமதிப்பீட்டு முகாம் :அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் மகளிர் பள்ளியில் நடந்த மாற்றுத்திறன மதிப்பீடு முகாமிவ் பங்கேற்ற சட்ட அமைச்சர் ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில்  நடந்த மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரையுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர்  தெரிவித்ததாவது;  முன்னாள் முதல்வர்  கலைஞர்  ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளிகள் என மாற்றி கௌரவப்படுத்தினார். அவர் வழியில்  ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.

இம்முகாமில் பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட முழு பார்வையற்றோர், குறை பார்வையுடையோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் குறை பாடுடையோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது.
இம்முகாமில் குழந்தை நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர், செவித்திறன், பார்வைத்திறன் குறைபாடு அறியும் வல்லுநர், மனநல மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு செய்கின்றனர்.
இம்முகாமில் கலந்து கொண்டு மருத்துவர்களால் பரிந்துரைக் கப்படும் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.

மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இத்தகைய முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

இம்முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். லியாகத்அலி, மாவட்ட கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், வட்டாட்சியர் செந்தில்குமார், பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி, பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top