Close
நவம்பர் 22, 2024 10:19 மணி

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கம்: ஆட்சியர் கவிதா ராமு தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவியர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பயிற்சிகள் குறித்து இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரும், சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களும் அரசு கல்வி கடன் உதவி மற்றும் வங்கி தெர்வுகள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரும், திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி)  ஆகியோர் பங்கேற்று பேசினர்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விடுதிகளில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி  பாராட்டினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
பெண்களாக பிறந்த அனைவரும் சாதனை படைக்கப் பிறந்தவர்களே. இச்சாதனையை படைக்க கல்வியை நாம் ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். இக்கல்வியை யார் ஒருவராலும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாது. இக்கல்வியானது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம் நம்முடைய இலக்கினை நாம் அடையலாம். இக்கல்வியுடன் மேலும் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள புத்தகங்களை அதிகளவில் படிக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசின் மூலம் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் முறையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது கல்வியையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மணிகண்டன், கல்வி ஆலோசகர் பாஸ்கரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) குமரேசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் மாரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top