ஒன்றிய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி 28-3-2022 திங்கள்கிழமை ஆற்றுப் பாலத்தில் இருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாகச் சென்று தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்திற்கு ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால் எல்பி எப் மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், மின்சாரம், வங்கி, போக்குவரத்து, நுகர்பொருள் வாணிப கழகம், தபால் தந்தி மற்றும் கட்டுமானம், உடல் உழைப்பு, தெரு வியாபாரிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் காளியப்பன்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கோ.திருநாவுக்கரசு, சு.பழனிராஜன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் உள்ளிட்டோர் கைதாகினர்.