Close
நவம்பர் 22, 2024 12:12 காலை

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பிரான்ஸ் தேசத்து சித்தர் நாஸ்ட்ரடாமஸ்..

லண்டன்

அலமாரியிருந்து ஒரு புத்தகம் விமர்சனம்

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் ‘மிஷெல் தெ நாத்ருதாம்‘ (Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள்.

வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதி வைத்ததில் பல நிகழ்ச் சிகள் நடந்து இருக்கின்றன, சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறன. சில நிகழ்ச்சிகள், சில வருடங் களில் சில மாதங்களில் சில வருடங்களில் நிகழக்கூடும். இவர் ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். இவருடைய மூதாதையர் யூதர்கள். இவருக்கு சிறுவயதிலேயே ஆரூடத்தில் ஆர்வம் இருந்தது. கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு போன்ற மொழிகளைக் கற்றார்.

உலகில் முன்கூட்டியே நடப்பவை பற்றி,  தன் தாய் மொழி யான பிரெஞ்சு மொழியில் குவாட்ரின் வடிவில் எழுதி உள்ளார். குவாட்ரின் என்பது நான்கு அடிகளை கொண்ட பாடல் இதை டிகோட் செய்வது சற்று கடினம். எனவே இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை துல்லியமாக சொல்வது கடினம். சில நடந்தன, பல நடக்காமலும் போயின, நடப்பதற்கு சாத்திய கூறுகளும் இருக்கின்றன.

சமீபமாக கொரோனாவை பற்றி இவர் அன்றே சொன்னதாக, ஊடகங்கள் செய்திகளை பரப்புகின்றன. உலகமே அதுவும் இப்படியான பேரிடர் நிகழும் போதெல்லாம் கொண்டாடப் படுகிற ஒரு பிரெஞ்சு ஆருட தீர்க்கதரிசியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது கணிப்புகளில் பல இடங்களில் பிளேக் நோய் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றை கொரோனாவுடன் ஒப்பிட்டுவாசித்தாலும்,  இந்த தீநுண்மி பற்றி தான் கணித்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை.

அவர் எழுதியவற்றில் பெரும்பான்மையானவற்றை
தனித்தனியாக வாசித்து, நடைமுறையில் நாம் சந்தித்த எந்தவொரு பெரிய உலக நிகழ்வையும் எளிதாய் ஒப்பிட்டு பொருத்தி விடலாம். அதுவே அந்த கணிப்புகளின் பலம். உண்மையில் நாஸ்ட்ரோடாமஸ் சொன்னதில் நாம் தான் சமக்காலத்தில் நடக்கிற நிகழ்வுடன் பொருத்தி பார்க்கிறோம்.

சதி கோட்பாடுகளுக்கு எதிரான பார்வையுடன் நாம் அணுகும் போது அவரது வார்த்தைகள் தெளிவற்றதாக இருக்கின்றது எனவும், சமகால நிகழ்வுகளுடன் பொருத்தி பார்ப்பதை வெறும் பிதற்றல்கள் எனவும் எளிதான ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
இருப்பினும், நாஸ்ட்ரோடாமஸ் கணிப்புகளை நம்புவது அல்லது நம்பாதது என்பது அவரவர் தனிப்பட்ட பார்வையா கும்.  ஆனால் அவற்றில் சில நம் கற்பனையை தூண்டுகின் றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

புத்தகம் வெளியாகி சுமார் நான்கு நூற்றாண்டுகள் கடந்தா லும், இந்த வருடம், அடுத்த வருடம் இவர் சொன்னதில் எது நடக்க போகிறது என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் குறைந்த பாடில்லை. தொடரும் நவீன புரளி இது .

இப்படியான வரலாற்று தீர்க்கதரிசிகள் கூறிய சில கணிப்புகள் பல எழுத்தாளர்களின் கற்பனையையும் ஆர்வத்தையும் தூண்டி எண்ணற்ற கட்டுரைகள் மற்றும் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டு அவர்களை சிறந்த விற்பனையாளர்களாக மாற்றியுள்ளன என்பதே உண்மை (என்னிடமே மூன்று வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இருக்கின்றன).

எதிர்காலம் ஒரு ஆழமான புதிராகவே இருப்பதாக நாம் உணர்ந்ததை, அவர்கள் அப்படியல்ல நாங்கள் கணித்திருக் கிறோம் என சொல்லி சென்றிருக்கிறார்கள். இதுப்போன்ற எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிய அவர்களிடம் திறன்கள் இல்லை என்று வாதிடாமல் வாசித்து செல்ல வேண்டியது தான். இப்படியான படைப்புகள் சமுதாயத்தில் எந்தவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது என்பதால்,

விவிலியம், குர்ஆன் மற்றும் இந்து புராணங்களில் முக்காலத் தையும் உணர்ந்தோர் பற்றியும், எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் தீர்க்க தரிசனமாக அறிவித்ததாக படித்திருக்கிறோம். இதில் பலருக்கும் கருத்து முரண் இருக்கலாம்.

உலகில் ஒரு சம்பவம் நடக்க போவதை முன்கூட்டியே உணர்ந்து , அதை தீர்க்கமாகக் கூறுவதை சாதாரண மொழியில் ஜோதிடம் , ஆருடம் என்கிறோம். இத்தகைய சிலரது இந்த சக்தியை இ எஸ் பி – எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன் என்கிறோம். இது குறித்த சில திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. இவற்றை நம்புவதா? வேண்டாமா? என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடலாம்.

விமர்சகர்: சண்.சங்கர், லண்டன், இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top